"100 கோடி தடுப்பூசி டோஸ்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது"- உலக சுகாதார அமைப்பு தகவல்
கோவாக்சின் திட்டத்தின் அடிப்படையில் 100 கோடி தடுப்பூசி டோஸ்களை பாதுகாத்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில், முன்னணி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகள் சேகரிக்கப்படுவதாகக் கூறினார்.
பைசர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து வல்லுநர்கள் முடிவு செய்வார்கள் எனவும், கோவாக்சின் திட்டத்தில் 189 நாடுகள் பங்கு பெற்றுள்ளதாகவும் டெட்ராஸ் கூறினார்.
Comments